16 வயது சிறுவனைச் தேடித் சென்ற 10 வயது சிறுமி.. இன்ஸ்ட்டா காதலால் விபரீதம்.!



in Gujarat 10 Year Old Girl Elope with 16 Year Old Boy 


குஜராத் மாநிலத்தில் உள்ள சபர் கந்தா மாவட்டம், தன்சுரா கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். தாயின் ஸ்மார்ட்போனில் சிறுமி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டதாக தெரியவருகிறது. 

இதன் வாயிலாக சிறுமி அங்குள்ள வேறொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார். சிறுவனும் சிறுமியுடன் போனில் பேசி வந்துள்ளார். இதனிடையே, கடந்த டிசம்பர் 31 அன்று சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். அவரை தேடி அலைந்த பெற்றோர், சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

gujarat

காதலனை தேடி ஓட்டம்

விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராம் நண்பரை தேடிச் சென்ற ஆச்சி தகவல் அம்பலமானது. இந்த காதலை சேர்த்து வைக்க 16 வயது சிறுவனின் 3 நண்பர்களும் உதவி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: எனக்கு திருமணம் ஆகிருச்சு.. போனில் ஷாக் செய்தி சொன்ன காதலன்., தீக்குளித்து உயிரைவிட்ட இளம்பெண்.!

இதனையடுத்து, சிறுமியை கண்டறிந்து மீட்ட காவல்துறையினர், 16 வயது சிறுவன் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூன்று பேர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
 

இதையும் படிங்க: 10th ஃபெயில்.. டியூஷன் போன இடத்தில், சிறுவன்.. 22 வயது பெண்ணுடன் ஓட்டம்.!