வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
10th ஃபெயில்.. டியூஷன் போன இடத்தில், சிறுவன்.. 22 வயது பெண்ணுடன் ஓட்டம்.!
சென்னையில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஒரு பத்தாம் வகுப்பு சிறுவன் கடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதை அடுத்து மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்காக அதே பகுதியில் இருக்கும் ஒரு டியூஷன் சென்டரில் சேர்ந்துள்ளார். அந்த டியூஷனை ஒரு இளம் பெண் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி வீட்டை விட்டு சிறுவன் வெளியில் சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. சிறுவனை நண்பர்களிடம் விசாரித்து பார்த்த அவர்கள் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில், டியூஷனில் போலீசார் விசாரணை நடத்தியதில் டியூஷன் ஆசிரியருக்கு 22 வயதில் ஒரு தங்கை இருந்துள்ளார் என்பதும் அவருடன் சிறுவன் காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ராகுல் (வயது 19) என்ற நபரும் அவர்களுடன் பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளார். இந்த மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: டியூசன்ல படிக்கிற பாடமா இது? 22 வயது இளம்பெண்ணுடன்., 15 வயது சிறுவன்.. போக்ஸோவில் பெண் கைது.!
18 வயது கூட நிரம்பாத சிறுவனை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்ற இளம் பெண் மற்றும் அவரது நண்பர் ராகுல் இருவரையும் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பவானியின் பவ்விய காதலில் சிக்கி, ஏமாற்றத்தால் இளைஞர் விபரீதம்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து சோகம்.!