மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பரிதாப பலி.. பூ பறிக்கச் சென்றபோது துயரம்.!
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கிளியூர் பகுதியில் வசித்து வருபவர் சரத் குமார் (வயது 27). இவர் பூ வியாபாரி ஆவார். சம்பவத்தன்று, அங்குள்ள கிளியானந்தன் என்பவரின் தோட்டத்திற்கு பூ பறிக்கச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டு பட்டாசு வெடித்து சோகம்; 22 வயது இளைஞர் பரிதாப பலி.. தீபாவளியன்று துயரம்.!
கிளியானந்தன் தனது தோட்டப்பயிர்களின் பாதுகாப்புக்காக, வனவிலங்குகளின் தாக்குதலுக்கு அஞ்சி, சட்டவிரோதமாக மின் வேலி அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, பூ பறிக்கச் சென்ற சரத் குமார், மின்வெளியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்வேலி வடிவில் காத்திருந்த எமன்
பூ பறிக்கச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லையே என குடும்பத்தினர் தேடிவந்தபோது, மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தது அம்பலமானது. இதனையடுத்து, தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர், சரத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தோட்டத்தின் உரிமையாளரான கிளியானந்தனை கைது செய்துள்ளனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊராட்சி நிதி மோசடி விவகாரம்; செயலர் பணியிடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு.!