கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஊராட்சி நிதி மோசடி விவகாரம்; செயலர் பணியிடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு.!
ரூ.8 இலட்சம் நிதி முறைகேடு செய்த ஊராட்சி மன்ற செயலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றியம், பரிக்கல் கிராமத்தில் வசித்து வருபவர் உமா மகேஸ்வரன் (வயது 35). இவர் திருநாவலூர் ஒன்றியம், செங்கம் ஊராட்சி செயலராக 2022 முத்த 2024 வரையில் பணியாற்றி இருந்தார்.
இதையும் படிங்க: 100ல் பயணம்.. 108 வந்தும் பிழைக்காத உயிர்.. 21 வயது இளைஞனுக்கு எமனாகிப்போன ரீல்ஸ் மோகம்.!
ரூ.8 இலட்சம் முறைகேடு
பணியில் இருந்தபோது, ஊராட்சி ஒன்றியத்தின் நிதியில் ரூ.8 இலட்சம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் பாண்டூர் ஊராட்சிக்கு உமா மகேஸ்வரன் மாற்றம் செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பின் ஜூன் மாதத்தில் கூவாகம் ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, நிதி முறைகேட்டிடில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அண்ணாமலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
பிடிஓ செல்வபோதகர் உத்தரவு
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அமர்வு, மகேஸ்வரனின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு செப்.30 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதன்பேரில் தற்போது ஊராட்சி மன்ற செயலர் உமா மகேஸ்வரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடிகார கணவன்... கள்ளக்காதலுடன் சேர்ந்து எமலோகம் அனுப்பிய மனைவி.!!