மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாட்டு பட்டாசு வெடித்து சோகம்; 22 வயது இளைஞர் பரிதாப பலி.. தீபாவளியன்று துயரம்.!
வெடிக்க பட்டாசுகளை வாங்கி ஆவலுடன் நண்பர்களுடன் பயணித்த இளைஞரின் பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டதில், பட்டாசுகள் வெடித்து இளைஞர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, எறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் டேவிட் வில்சன் (வயது 22). இவர் தனது நண்பர்கள் இருவருடன் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஊராட்சி நிதி மோசடி விவகாரம்; செயலர் பணியிடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு.!
அப்போது, சாலையில் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தவர்களின் ராக்கெட் ஒன்று இருசக்கர வாகனம் மீது விழுந்துள்ளது. இதில், டேவிட் வாங்கிய நாட்டு பட்டாசு எனப்படும் ஆபத்தான தன்மை கொண்ட பட்டாசு மீது தீப்பொறி பட்டு வெடித்துச் சிதறியுள்ளது. பிற பட்டாசுகளும் வெடித்துள்ளன.
Fire | FIle Pic
ஒருவர் பலி., இருவர் படுகாயம்
இந்த சம்பவத்தில் டேவிட் பலத்த தீக்காயத்துடன் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
உயிரிழந்த டேவிட்டின் உடல் எலவனாசூர்கோட்டை காவல்துறையினரால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 100ல் பயணம்.. 108 வந்தும் பிழைக்காத உயிர்.. 21 வயது இளைஞனுக்கு எமனாகிப்போன ரீல்ஸ் மோகம்.!