பள்ளி பருவ காதலை மீண்டும் கனெக்ட் செய்த பெண் ஐடி ஊழியர்.. கற்பழித்து கைவிட்ட காதலன்.!



  IN COIMBATORE WOMAN CHEATED BY LOVE BOY 

திரைப்பட பாணியில் பள்ளிப்பருவ காதலனை நம்பிய இளம்பெண், கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் பகுதியில் வசித்து வரும் 29 வயதுடைய பெண்மணி, ஐடி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2008ம் ஆண்டு தடாகம் சாலையில் இருக்கும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்று வந்துள்ளார்.

அப்போது, தன்னுடன் உடையார்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஜெயிலாபுதீன் என்பவருடன் நட்பாக பழகி இருக்கிறார். இறுதியில் நட்பு காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின் கல்லூரி படிப்பு, வேலை என தொடர்பு இல்லாது இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: பல பெண்களிடம் மோசடி திருமணம்; கேடி இளைஞன் கைது.. இறுதி நேரத்தில் பெண்ணை காப்பாற்ற முயன்றும் தோல்வி.! 

உல்லாசம்

இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன் பெண்ணுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்க, 2022ல் காதல் ஜோடி மீண்டும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டது. இதனால் பள்ளிப்பருவ காதல் மீண்டும் மலர்ந்துள்ளது. ஜெய்லாபுதினும் பெண்ணை திருமணம் செய்வதாக உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். 

திருமணத்திற்கு மறுப்பு

பாண்டிச்சேரி, கொச்சி என பல சுற்றுலா தலங்களுக்கு சென்று உல்லாசமாகவும் இருந்துள்ளனர். பின் ஜைலாபுதீன் பழக்கத்தை கைவிட்டுள்ளார். பெண் இதுகுறித்து கேட்டபோது, திருமணத்திற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவதூறாக பேசி அடித்து இருக்கிறார்.

இந்த விஷயம் குறித்து பாதிக்கப்ட்ட பெண்மணி புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஜைலாபுதீன் (வயது 29) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.110 நோட்டு கொடுத்து சில்லறை வாங்கிச் சென்ற மர்ம ஆசாமி; பெட்டிக்கடைக்காரர்களே உஷார்.!