பாஜக பிரமுகர் வாகனம் மோதி கட்டிட தொழிலாளர்கள் இருவர் பலி.. குமரியில் சோகம்.!



in Kanyakumari Accident 2 Died 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 37), வினோத் (வயது 28). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள் ஆவார்கள். 

இருவரும் பணி நிமித்தமாக காவல் கிணறு பகுதிக்கு சென்றவர்கள், பின் மீண்டும் நேற்று காலை நேரத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். 

அப்போது, பணகுடி பகுதியில் இருசக்கர வாகனம் வந்தது. அச்சமயம், ஆவாரைக்குளம் கிராமத்தை சேர்ந்த பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அசோகன், தனது காரில் வந்தார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை வழக்கறிஞர் வன்கொடுமை செய்த விவகாரம்; மேலும் சிலருக்கு தொடர்பு? தொடரும் விசாரணை.!

kanyakumari

விபத்தில் சிக்கி பலி

இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாஜக நிர்வாகியின் கார் ஓட்டுநர் பாலாகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக வாங்கிய காருக்கு, பாஜக பிரமுகர் பதிவெண் கூட வாங்கவில்லை.

இதையும் படிங்க: கன்னியாகுமரி: 14 வயது சிறுமி பலாத்காரம்; அலுவலகத்தில் வழக்கறிஞரின் அதிர்ச்சி செயல்..! போக்ஸோவில் கைது.!