திடீரென திரும்பிய கார்.. பயணிகளின் உயிரை காப்பாற்றிய டெம்போ ஓட்டுநர்.. திக்., திக் நிமிடத்திலும், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு.!



in Kanyakumari Nagarcoil Highway Tempo Van Car Accident 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. இந்த கார் திடீரென பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்ப திருப்ப முற்ப்பட்டது.

சாலையின் மற்றொரு வழித்தடத்தில் டெம்போ ஒன்று நேராக சென்றுகொண்டு இருந்த நிலையில், கார் ஓட்டுநர் திடீரென வாகனத்தை திருப்பினார். இதனை டெம்போ ஓட்டுநர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

இதையும் படிங்க: செயின் பறித்தவர், ஜாதி வெறியருக்கு தவெக மாவட்ட செயலாளர் பொறுப்பு? - நிர்வாகிகள் குமுறல்.!

நெஞ்சை பதறவைக்கும் காட்சி

டெம்போ ஓட்டுநர் சுதாரிப்புடன் செயல்பட்டு காருடன் வாகனம் நேராக மோதுவதை தவிர்த்து வாகனத்தை திருப்பினார். இருப்பினும் காரின் மீது வாகனம் மோதி, கார் பெட்ரோல் பங்கின் தடுப்பில் மோதி உருண்டு விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் டெம்போ ஓட்டுனரின் சாதுர்ய செயல்பாடு காரணமாக, காரில் வந்தவர்கள் காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விஷயம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: போதையில் தந்தை அடித்துக்கொலை; மனைவி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்.. நடந்தது என்ன?