96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"ஆசைக்கு இணங்கு" நிதிநிறுவன மேலாளரின் அதிர்ச்சி செயல்., போலி பிடியாணை பிறப்பித்து பாலியல் தொல்லை.!
வாட்சப் வீடியோ காலில் பெண்ணை வரவழைத்து, அதனை படமெடுத்து உறவினர்களுக்கு அனுப்பி கொலை செய்திடுவேன் என போலியான பிடியாணை பிறப்பித்த நிதிநிறுவன மேலாளரின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.
போலி பிடியாணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் மகாவீர் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, அதில் ஒருசில தவணை செலுத்த தவறும் பெண்களை குறித்து, அந்நிறுவனத்தின் மேலாளர் போலி கைது நிதி ஆணை பிறப்பித்து பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகனின் பிறந்தநாளில் தந்தை கொடூர கொலை; முன்விரோதத்தால் இரும்பு கம்பியால் அடித்து பயங்கரம்.!
"ஆசைக்கு இணங்கு" பாலியல் தொல்லை
நிதி நிறுவனத்தில் ரூ.16 இலட்சம் கடன் வாங்கிய பெண் ஒருவர், ரூ.3 இலட்சம் செலுத்திவிட்ட நிலையில், 3 தவணைகள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் போலி பிடிவாரண்டை பிறப்பித்து, மேலாளர் சரவணன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பெண்ணை வற்புறுத்தி வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் வரவைத்துள்ளார்.
விசாரணை தொடக்கம்
பல நாட்களாக போலி பிடிவாரண்ட் வைத்து மிரட்டிய நிலையில், சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்ற பெண்ணுக்கு உண்மை தெரியவந்துள்ளது. வள்ளியூர் காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்கப்பட்டபோது சரிவர விசாரணை நடத்தப்படாத நிலையில், தற்போது நீதிமன்ற நடவடிக்கையின் பேரில் விசாரணை தொடங்கப்படவுள்ளது.
போலி நீதிமன்ற ஆணையை வைத்து மேலாளர் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சேர்ந்து வாழ வரமாட்டியா.." கள்ள காதலன் மீது கொலைவெறி தாக்குதல்.!! இளம் பெண் கைது.!!