நள்ளிரவில் பெண்ணை நோட்டமிட்ட 2 பேர்.. 10 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை.!



in-krishnagiri-girl-killed-by-affair-issue

வேலையை முடித்துவிட்டு தனியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்ணை, 2 பேர் கும்பல் கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, கஞ்சனூர் பகுதியில் வசித்து வருபவர் தீபா (வயது 32). இவரின் கணவர் மாதேஷ், உயிரிழந்துவிட்டார். தீபா - மாதேஷ் தம்பதிக்கு கௌசிக் தரன் (வயது 12) என்ற மகன், ஷிவானி என்ற 10 வயதுடைய மகள் இருக்கின்றனர். 

தீபா போச்சம்பள்ளி சிப்காட்டில் செயல்படும் எலக்ட்ரிக் வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில், கேண்டினில் வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் 08ம் தேதி தான் அவர் அங்கு வேலைக்கு சேர்ந்ததாக தெரியவருகிறது. இதனால் தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: புத்தாண்டு கோலம் மீது வண்டி ஓட்டியவருக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பகீர்.! 

2 பேர் கும்பலால் கொலை

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வேலையை முடித்துவிட்டு, அவர் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். ஜெ.ஆர்.கே பள்ளி அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி புறப்பட்டுள்ளார். 

இதனிடையே தீபாவை 2 மர்ம நபர்கள் பின்தொடர, இதுகுறித்து நண்பர் கெளதம் (22) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கௌதமும் வாகனத்தில் மெதுவாக செல்லுமாறும், தான் பின்னாலேயே வருகிறேன் எனவும் கூறி இருக்கிறார். பின் சிறிது நேரம் கழித்து தீபாவுக்கு கெளதம் தொடர்புகொண்டபோது, அவர் பேசவில்லை. அலறல் சத்தம் கேட்டுள்ளது. 

Murder

காவல்துறை விசாரணை

இதனால் கெளதம் விரைந்து சென்று பார்த்தபோது, கஞ்சனூர் முருகன் கோவில் பகுதியில், தீபா உடலில் 10 க்கும் மேற்பட்ட காயத்துடன் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியுடன் தீபாவை மீட்டு மருத்துவமனைக்கு சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளசூளகிரி பகுதியில் வசித்து வரும் கௌதமிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கூலி வேலைக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. 

தலைமறைவானவருக்கு வலைவீச்சு

தீபாவின் கணவர் உயிருடன் இருந்தபோது, அவர்கள் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது, பக்கத்து வீட்ல வசித்து வந்த மிதுன் என்பவருடனும் தீபா பழகி இருக்கிறார். இதனால் மிதுனை அதிகாரிகள் தேடியபோது, அவர் தலைமறைவானது உறுதியானது. 

இதனையடுத்து, மிதுன் தனது கள்ளக்காதலை கைவிட்டு தீபா கௌதமுடன் பேசும் ஆத்திரத்தில் கொலை நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது. தலைமறைவான மிதுனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சியில் கணவரை இழந்த கைம்பெண் பலாத்காரம், கொலை.. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!