விஜய்டிவியில் விருவிருப்பாக ஒளிபரப்பாகும் இரண்டு தொடர்களின் நேரம் மாற்றம்! முழு விவரம் இதோ...
மதுரை: காவலர் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.!

உசிலம்பட்டி பகுதியில் காவலர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, நாகையாபுரம் காவல் நிலயத்தில், காவலராக வேலை பார்த்து வந்தவர் சிவா (வயது 32).
இதையும் படிங்க: #Breaking: திருப்பரங்குன்றத்தால் உண்டாகப்போகும் மதப்பிரச்சனை? இராமநாதபுரம் எம்.பி செயல்.. அண்ணாமலை கண்டனம்.!
இவர் இன்று பாப்பி நாயக்கன்பட்டி பகுதியில் விசேஷ வீட்டிற்கு சென்றுள்ளார். பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
கத்தியால் குத்தி கொலை
அப்போது, அவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவரின் உறவினர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது தெரியவந்தது.
இதனால் அவர் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நிகழ்விடத்தில் இருந்த கேமிரா பதிவு ஆய்வு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சாதம் வடித்த நீர் விழுந்து, 3 வயது சிறுவன் பரிதாப பலி.. போராடி பறிபோன உயிர்.. மதுரையில் நடந்த சோகம்.!