மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் காதலனை கரம்பிடிக்க கணவரை பலிகொடுத்த மனைவி; 18 வயது மகனும் உடந்தையாக பகீர் சம்பவம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், அசோக் நகரில் வசித்து வருபவர் தர்மலிங்கம் (வயது 42). இவர் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி (வயது 36). தம்பதிகளுக்கு 18 வயதுடைய மகன் இருக்கிறார். கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம் தேதி திருமங்கலத்திற்கு விடுமுறைக்காக வந்த தர்மலிங்கம், விடத்திக்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வேன் மோதி பலியானார்.
இந்த விபத்து குறித்த விசாரணையில் தற்போது தர்மலிங்கம் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமாகி இருக்கிறது. அதாவது, தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி, விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடி, கல்லணை கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஜோதி, தனது பக்கத்து கிராமமான உலகானி பகுதியை சேர்ந்த பால்பாண்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலை அறிந்த பெற்றோர் மகளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
முதல் காதலை மறக்க முடியாமல், 18 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி செயல்
திருமணத்திற்கு பின்னரும் பால்பாண்டியுடன் பழகி வந்த ஜோதி, ஒருகட்டத்தில் நெருங்கி இருக்கிறார். இந்த தகவலை அறிந்த தர்மலிங்கம் மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி கணவரை கொலை செய்ய முடிவெடுக்க, தாய்க்கு உடந்தையாக 18 வயது மகனும் இருந்துள்ளார். சம்பவத்தன்று விடுமுறைக்கு வந்த தர்மலிங்கத்தை, பால்பாண்டியின் சகோதரர் உக்கிரபாண்டி ஏற்பாடு செய்த மின்வேன் ஓட்டுநர் சிந்தாமணி பாண்டி (வயது 40), கிளீனர் அருண் (வயது 36) ஆகியோர் வேன் ஏற்றிக் கொலை செய்தனர்.
இதையும் படிங்க: போதையில் தகராறு; இளைஞரின் தலையை நசுக்கிக்கொன்ற பயங்கரம்.. மதுரையில் அதிர்ச்சி.!
தந்தையுடன் பயணித்த மகன், விபத்து சம்பவத்திற்கு முன்னதாகவே வாகனத்தில் இருந்து இறங்கி இருக்கிறார். அதற்கு பின் விபத்து போல ஜோடித்து நாடகம் ஆடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் உண்மை அம்பலமாகவே, அதிகாரிகள் ஜோதி, அவரின் 18 வயது மகன், பாண்டி, அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். பால்பாண்டிக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நண்பனுக்கு ஆதரவாக சென்றவர் சரமாரியாக குத்திக்கொலை.!