மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் விவகாரத்தில் பயங்கரம்; நண்பனுக்கு ஆதரவாக சென்றவர் சரமாரியாக குத்திக்கொலை.!
மதுரை மாவட்டத்தில் உள்ள தல்லாகுளம், ஆசாரி தெருவில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன். இவரின் மகன் காதர் இஸ்மாயில் (29). தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசேன், முருகன், ராஜா ஆகியோர் இஸ்மாயீலின் நண்பர்கள் ஆவார்கள்.
காதர் இஸ்மாயிலுக்கு சரவணகுமார் என்ற நண்பர் இருக்கிறார். இவர் ஜெயஹிந்த்புரம் பகுதியில் வசித்துவரும் சசிகலா (24) என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார். நேற்று முன்தினம் காதலுக்கு பிறந்தநாள் என்பதால், சசிகலாவின் தோழிகள் வினோதினி, பைபிதா பிறந்தநாளை சிறப்பிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மருமகள் மீது நடத்தை சந்தேகம்; 1 வயது பேத்தியின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டு கொன்ற தாய்க்கிழவி..!
கடையில் நடந்த சண்டை, தட்டிக்கேட்க வந்தவர் குத்துப்பட்டு பலி
இதனால் வாடகைக்கு கார் எடுத்து இவர்கள் மதுரை சென்ற நிலையில், அங்கு முருகன், உசேன் ஆகியோர் சென்றுள்ளனர். இந்த தகவலை அறிந்த சரவணகுமார் கோபமடைந்து, காதலி உணவு சாப்பிட சென்ற ஹோட்டல் குறித்த விபரம் அறிந்து அங்கு சரவணகுமார் மற்றும் காதர் இஸ்மாயில் ஆகியோர் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் மதுபோதையில் இருந்த முருகன் தரப்பு, சசிகலா மற்றும் அவரின் தோழிகளோடு தகராறில் ஈடுபட்டுள்ளனர். சரவணகுமார் மற்றும் காதர் அதனை தட்டிக்கேட்க, இருதரப்பு வாக்குவாதம் உருவாகி இருக்கிறது. இந்த சமயத்தில் முருகன் கத்தியை எடுத்து இஸ்மாயிலை சரமாரியாக குத்தி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் சரவணகுமாருக்கும் கத்திக்குத்து விழ, அவர் படுகாயமடைந்து இருக்கிறார். இஸ்மாயில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் அமைச்சர் வீட்டருகே பயங்கரம்.! நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி கொடூர கொலை!!