மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதையில் தகராறு; இளைஞரின் தலையை நசுக்கிக்கொன்ற பயங்கரம்.. மதுரையில் அதிர்ச்சி.!
மதுரை மாவட்டத்தில் உள்ள வில்லாபுரம் வயல்வெளிப்பகுதியில், கைகள் துண்டிக்கப்பட்டு, தலை நசுங்கியவாறு சடலம் ஒன்று கிடந்தது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில், மீனாட்சி பஜார் பகுதியில் வேலை பார்த்து வரும் மனோஜ் என்பவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நண்பனுக்கு ஆதரவாக சென்றவர் சரமாரியாக குத்திக்கொலை.!
போதையை ஏற்றிவிட்டு கொடூர கொலை
அதாவது, மனோஜும், சர்ச்சைக்குரிய 5 பேருக்கும் இடையே பாரில் சண்டை நடைபெற்றுள்ளது. அதற்கு சமாதானம் பேசலாம் என்று கூறி வயல்வெளிக்கு அழைத்துச்சென்று, கூடுதல் மதுவை ஊற்றிவிட்டு மனோஜின் கைகளை துண்டித்து இருக்கின்றனர்.
பின் அவரின் தலையை கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய செல்வராஜ், சுபாஷ், சாய் கார்த்திக் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் ஆணவக்கொலை; பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்.!