திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுரை: மனைவிக்கு வளைகாப்பு நடத்திவிட்டு கணவர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்.!
மனைவிக்கு வளைகாப்பு நடத்திய பின்னர், கணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் திருப்பரங்குன்றத்தில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (வயது 23). இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். முத்துக்குமாரின் மனைவி முத்துராக்கு.
இதையும் படிங்க: மதுரையில் பயங்கரம்... சாலையில் வீசப்பட்ட தலை.!! கொலையாளிகள் யார்.? பரபரப்பு விசாரணை.!!
தம்பதிகள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே, முத்துராக்கு தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டது.
தூக்கிட்டு தற்கொலை
இதனிடையே, நவம்பர் 16 அன்று வீட்டில் இருந்த முத்துக்குமார், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடன் தொல்லை
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், முத்துக்குமார் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கடனைஅடக்க முயற்சித்து வந்துள்ளார்.
வீட்டை விற்பனை செய்ய முடிவு
கடன் சுமை அதிகம் இருந்ததால், அவர் வீட்டினை விற்பனை செய்யலாம் என எண்ணியுள்ளார். இந்த விசயத்திற்கு முத்துக்குமார் - அவரின் தாய் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் தாய் வீட்டை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், முத்துக்குமார் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: துரோகம்... நண்பன் கொலையில் சிக்கிய ராணுவ வீரர்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!