மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துரோகம்... நண்பன் கொலையில் சிக்கிய ராணுவ வீரர்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
மதுரை அருகே நண்பனை கொலை செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வருடம் நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஒரு வருடத்திற்கு பின் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட அழுகிய சடலம்
மதுரை மாவட்டம் சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. கடந்த 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் புலியூர் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் ராஜபாண்டி என தெரிய வந்தது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜபாண்டி மதுவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கு பின் துப்பு துலக்கிய காவல்துறை
இதனைத் தொடர்ந்து ராஜபாண்டியை கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையின் விடாமுயற்சியின் பயனாக ராஜபாண்டியை கொலை செய்த குற்றவாளி ஒரு வருடத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் காவல்துறையின் விசாரணையில் ராஜபாண்டியை அவரது நண்பரும் ராணுவ வீரருமான மருதுபாண்டி என்பவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருது பாண்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்... தாய் அடித்து கொலை.!! மகன் கைது.!!
விசாரணையில் வெளியான தகவல்
ராஜபாண்டி மற்றும் மருதுபாண்டி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ராணுவத்தில் பணிபுரிந்த மருதுபாண்டி ஊருக்கு விடுமுறையில் வரும் போதெல்லாம் ராஜபாண்டியுடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார். இந்நிலையில் கடந்த விடுமுறையின் போது அவர் முன்பகை காரணமாக ராஜபாண்டி குடித்த மதுவில் விஷத்தை கலந்து அவரை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர் தனது நண்பனை கொலை செய்த சம்பவம் மதுரை பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "புள்ளத்தாச்சிய இப்படி செஞ்சிட்டானே.." தாய், மகள் கொடூர கொலை.!! தந்தை வெறி செயல்.!!