மயிலாடுதுறை: பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: சுகாதார ஆய்வளார் போக்ஸோவில் கைது.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் செந்தில் நாதன். இங்கு நர்சிங் பயிற்சிக்கு மாணவிகளும் வந்து இருக்கின்றனர்.
இதனிடையே, நர்சிங் பயிற்சிக்கு வந்த மாணவிக்கு ஒருவருக்கு, செந்தில் நாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கொடுமை.!
பாலியல் தொல்லை
புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் செந்தில்நாதன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி சிறுமி என்பதால், இதுகுறித்து போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்திநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 60 வயது கிழவனை நொறுக்கிய மக்கள்.!