வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 60 வயது கிழவனை நொறுக்கிய மக்கள்.!
வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை பொதுமக்கள் நொறுக்கியெடுத்தனர்.
சென்னையில் உள்ள அம்பத்தூர், வில்லிவாக்கம், நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் சிதம்பரம் (வயது 60). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு நேரத்தில் அப்பகுதியில் வசித்து வரும் 9 வயதுடைய சிறுமி, வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். இதனைகவனித்த சிதம்பரம், சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறை? சென்னையில் தாய் கண்ணீர் குமுறல்..!
முதியவருக்கு தர்ம அடி
இதனைக்கண்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர், முதியவரை பிடித்து அடித்து நொறுக்கினர். பின் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் முதியவர் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போக்ஸோவில் வழக்குப்பதிந்து சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உணவு டெலிவரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை., எஸ்.ஐ-க்கு ஆபாச அர்ச்சனை.. இளைஞர்கள் அடாவடி.!