ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
மகளுக்கு உணவு கொடுத்த 10 நிமிடத்தில் தலை நசுங்கி உயிரிழந்த தந்தை; வழக்கறிஞருக்கு லாரியில் வந்த எமன்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சம்மந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துமணி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
மகளுக்கு துணையாக முத்துமணியின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார். நேற்று இருவருக்கும் உணவு கொடுக்க வந்த முத்துமணி, பின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். முத்துமணி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்ற 10 நிமிடத்தில், அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம்; 25 வயது இளைஞருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!
லாரி சக்கரத்தில் சிக்கி சோகம்
கேரளாவில் இருந்து வந்த பால் கண்டைனர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது பக்கவாட்டு பகுதியில் எதிர்பாராத விதமாக மோதி இருக்கிறது. இதில் நிலைதடுமாறியவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், முத்துமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உணவு கொடுத்துவிட்டு சென்ற தந்தை, 10 நிமிடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்து சடலமாக வந்ததை அறிந்த தாய், மகள் உடலை பார்க்க வேண்டி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சிவகாசி: நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து சோகம்; தாய்-மகன் பரிதாப பலி.! மழையால் நடந்த சோகம்.!