Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
தலைமை ஆசிரியரே மிரளும் விடுதி.. மாணவர் விடுதி வளாகத்துக்குள் பகீர்.. பெற்றோர் பரபரப்பு பேட்டி.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூலிப்பட்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு என விடுதியும் உள்ளது. இந்த பள்ளியில் கரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் அஜய், 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
சிறுவன் பலி
இவர் சம்பவத்தன்று விடுதியின் மூன்றாவது அறையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மாணவர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதிலும், மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
A mother went to buy milk, and the train started. The guard saw and stopped the train.🙏❤️ pic.twitter.com/If8PRMxG5T
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) January 7, 2025
இதையும் படிங்க: மீன்பிடிக்கச் சென்றவருக்கு தேனீக்கள் வடிவில் வந்த எமன்; பரிதாப பலி.!
காவல்துறை விசாரணை
சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவுபெற்றதும், மாணவர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். இதனிடையே, உயிரிழந்த மாணவரின் பெற்றோர் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கின்றனர்.
பெற்றோர் பரபரப்பு தகவல்
அதாவது, மாணவர் தங்கும் விடுதியில் மானவர்கள் குழுவாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. உரிய பராமரிப்பு, கண்காணிப்பு நடவடிக்கை இல்லாதது காரணமாக அஜய் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்களின் செயல்முறை குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பள்ளியில் மாணவர்களை கட்டுப்படுத்த இயலாமல், தலைமை ஆசிரியர்களே பணியிட மாற்றம் வாங்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Namakkal: "10% கொடுத்தா கரும்பு ஏத்துவோம்" - பொங்கல் பரிசுத்தொகுப்பில் விவசாயிகளிடம் கமிஷன் டீலிங்..!