Namakkal: "10% கொடுத்தா கரும்பு ஏத்துவோம்" - பொங்கல் பரிசுத்தொகுப்பில் விவசாயிகளிடம் கமிஷன் டீலிங்..!



in-namakkal-tiruchengode-sugarcane-farmers

 

தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்ய ரூ.35 என அறிவிக்கும் நிலையில், நாங்கள் தானே கரும்பை எடுத்து ரேஷன் கடைக்கு கொண்டு செல்கிறோம், அதற்கு டிரான்ஸ்போர்ட் செலவு சேரும் என அதிகாரிகள் கரும்புக்கான தொகையில் கமிஷன் பேசி விவசாயிகளின் உழைப்பை சுரண்டுவதாக புகார் எழுந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகள் பயிரப்பப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு மக்களுக்கு பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்குகிறது. இதற்காக கரும்பு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!

இதனிடையே, திருச்செங்கோடு, பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வரும் விவசாயிகளிடம், கரும்பு கொள்முதல் செய்ய 10% கமிஷன் பேசும் சம்பவம் நடந்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு கரும்பு கொள்முதல் செய்யும் எழில் என்பவர், விவசாயிகளிடம் கமிஷன் பேசி ஒத்துழைப்பை விரும்புகிறார். 

கரும்புக்கு கமிஷன்

அவரிடம் கேள்வி கேட்டால் கரும்பு வந்து எடுக்கிறேன் என அதனை காயவைத்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், 4000 கரும்புகளை கொள்முதல் செய்தால், 400 கரும்பு கமிஷன் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

கரும்பு ஒன்று விவசாயிகளிடம் இருந்து ரூ.35 க்கு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கமிஷன் போக விவசாயிகளுக்கு ரூ.20 முதல் 22 மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. திருச்செங்கோடு கூட்டுறவு சங்க சார் பதிவாளர் எழில் கமிஷன் தொகை கேட்டு மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

விவசாயிகள் வேதனை

கரும்பு கொள்முதல் செய்து அனுப்பி வைக்கப்பட்டதும், அரசு ரூ.35 அறிவிக்கப்பட்டாலும், அதிகாரிகள் ரூ.22 வரை மட்டுமே தருவதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்து கேட்டால் நாங்கள் ஆட்களை வைத்து கரும்பை ஏற்றுமதி செய்து ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கிறோம் என கூறுவதாகவும் சொல்லப்படுகிறது.

மொத்தமாக 10 வண்டிகள் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டால், 2 வண்டிகள் கமிஷனாக தரவேண்டும் என மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது. 

Video Thanks: NewsTamilTV24X7

இதையும் படிங்க: தனிகுடித்தனத்திற்கு ஆசைப்பட்டு, புகுந்த வீட்டிற்கு எமனான மருமகள்.. பாச பந்தத்தால் பறிபோன 3 உயிர்கள்.!