ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
மீன்பிடிக்கச் சென்றவருக்கு தேனீக்கள் வடிவில் வந்த எமன்; பரிதாப பலி.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, மௌஸி பச்சைப்பாலி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் (வயது 60). இவரின் மகன் அருள் (வயது 36), மகள் சரண்யா (வயது 38). இவர்கள் இருவரும் ஆற்றில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
இதனிடையே, இவர்கள் மூவரும் மீன்பிடிக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, பாசூர் காவேரி ஆற்றுப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர். கரையில் இருந்த மின்மயானம் பகுதியில் இருந்தபடி மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி
அச்சமயம், அங்கு வந்த மலைத்தேனீக்கள், திடீரென விரட்டிவிரட்டி மூவரையும் தாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் மூவரும் படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: Namakkal: "10% கொடுத்தா கரும்பு ஏத்துவோம்" - பொங்கல் பரிசுத்தொகுப்பில் விவசாயிகளிடம் கமிஷன் டீலிங்..!
அப்போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தங்கராஜ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், எஞ்சிய அருள், சரண்யா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!