தமிழகமே அதிர்ச்சி.. இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 40 வயது பெண், 4 பேர் கும்பலால் கற்பழிப்பு.!



in Ramanathapuram 40 year Old Woman Rape 

 

தனியாக பெண் வருவதை நோட்டமிட்ட கும்பல் பலாத்காரம் செய்த துயரம் இராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தேந்தல் கிராமத்தில், இரயில் தண்டவாளம் அருகில் 40 வயதுடைய பெண் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: 12 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; பீரோ விழுந்து துடிதுடித்து மரணம்.!

பெண்மணி இயற்கை உபாதையை கழிக்க தண்டவாளப்பகுதிக்குச் சென்றபோது, பெண் தனியாக வருவதை நோட்டமிட்ட 4 பேர் கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 

ramanathapuram

4 பேர் கும்பல் கைது

இந்த விஷயம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் இராமநாதபுரம் காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகியோடம் விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கன்னியாகுமரி பள்ளி மாணவி, கள்ளக்குறிச்சியில் விவசாய நிலத்தில் பெண் கொலை என கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்த துயரம் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் அம்பலமாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: "பாதுகாப்பே இல்ல" பள்ளி வளாகத்தில் 4 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்; பெற்றோர் கண்ணீர் குமுறல்.!