மாணவிகளிடம் ஆபாச பேச்சு; அரசுப்பள்ளி ஆசிரியர் ட்ரான்ஸ்பர்.!



in Ramanathapuram Govt School Teacher Transfer 


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் 11 மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளிடம், ஆபாசமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

மாணவிகள் புகார்

இந்த விஷயம் குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவே, பெற்றோர் பள்ளிக்கு நேரில் வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.  மேலும், மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், முதன்மை கல்வி அலுவலர் சின்ன ராசு, கல்வி அலுவலர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள், பள்ளிக்கு சென்று விசாரணை செய்தனர். 

கல்வி அலுவலர் உத்தரவு

விசாரணையில், மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பில் புகார்கள் குவிக்கப்படவே, துறை ரீதியான விசாரணையும் உன்னெடுக்கப்ட்டது. இதனையடுத்து, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சரவணன், திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 40 வயது பெண், 4 பேர் கும்பலால் கற்பழிப்பு.!

இதையும் படிங்க: 12 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; பீரோ விழுந்து துடிதுடித்து மரணம்.!