14 வயதில் காதல், 15ல் திருமணம் & கர்ப்பம்.. சேலத்தில் பகீர் சம்பவம்.! இளைஞருக்கு வலைவீச்சு.!



in Salem 15 Year Old Girl Pregnant after Marriage like Film 

 

திரைப்பட பாணியில் நடந்த சிறுமியின் திருமணம் மற்றும் கர்ப்பம் தொடர்பான தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்படவே, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: "6 சென்ட் இடத்துக்கு அநியாயமா உசுரு போச்சே... " நில தகராறில் தம்பி படுகொலை.!! அண்ணன், அண்ணி வெறி செயல்.!!

அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியிடம் விசாரித்தபோது, கெங்கவல்லி பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி விக்னேஷ் (வயது 29) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.

Salem

14 வயதில் காதல், 15ல் திருமணம் & கர்ப்பம்.. 

15 வயதிலேயே காதலில் விழுந்து, அதன் மீதான ஆர்வத்தில் 2024 செப் 16 அன்று திருமணமும் செய்துகொண்டது தெரியவந்தது. திருமணத்திற்கு பின் திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, அவ்வப்போது தனிமையிலும் சந்தித்துக்கொண்டுள்ளனர். 

இதனால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விக்னேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்கார விவகாரம்; தோழி அதிரடி கைது.!