"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
"6 சென்ட் இடத்துக்கு அநியாயமா உசுரு போச்சே... " நில தகராறில் தம்பி படுகொலை.!! அண்ணன், அண்ணி வெறி செயல்.!!
சேலம் அருகே வீட்டை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தத் தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த நபரின் அண்ணன் மற்றும் அண்ணியை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டுக் குடும்பம்
சேலம் மாவட்டம் மாமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவருக்கு 4 மகன்களும் 2 மகள்களும் இருந்தனர். இவரது மூத்த மகன் சிவஞானம் மற்றும் இளைய மகன் செல்வராஜ். மேலும் அவரது கடைக்குட்டி மகனான பூமிநாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜுவிற்கு சொந்தமாக 6 சென்ட் வீட்டு நிலமும் 40 சென்ட் விவசாய நிலமும் உள்ளது. ராஜு தனது மகன்கள் மற்றும் மருமகள்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
சொத்து தகராறில் தம்பி படுகொலை
ராஜுவின் வீட்டை பங்கு பிரிப்பதில் அவரது மகன்களான சிவஞானம் மற்றும் செல்வராஜிடையே தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டின் முன் கூரை அமைத்திருக்கிறார் செல்வராஜ். இது தொடர்பாக சிவஞானத்தின் மனைவி மற்றும் செல்வராஜ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனது மனைவியுடன் தம்பி சண்டையிடுவதை கண்டு கோபமடைந்த சிவஞானம் தம்பியை தாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: "நம்மள சந்தோசமா இருக்க விடமாட்டான்.." கணவனுக்கு சயனைடு கலந்த மது.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!
மேலும் தம்பியின் மனைவியான ரேவதி என்பவரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார் சிவஞானம். இதனை தொடர்ந்து தேங்காய் உரிக்கும் கம்பியால் தனது தம்பியை குத்தி கொலை செய்திருக்கிறார் சிவஞானம். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் காயமடைந்த ரேவதியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக சிவஞானம் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "ஐயோ கொன்னுட்டாங்களே..." துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!