மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்கார விவகாரம்; தோழி அதிரடி கைது.!



in Chennai Mentally Challenged Girl Rape Case 

 

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி, மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தார். இவர் கல்லூரியில் பயின்று வந்த தோழியிடம், அவசர உதவி தேவைப்படலாம் என்ற எண்ணத்துடன் தனது நிலைகுறித்து கூறி இருந்தார். இதனை தனக்கு சாதகமாக்கிய தோழி, மாணவியிடம் இளைஞர்கள் அத்துமீற அனுமதித்து இருக்கிறார். 

கடந்த ஒரு ஆண்டுகளாக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த நிலையில், மாணவியின் செல்போனுக்கு ஆபாச செய்திகள் வந்ததை கண்ட மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து அதிர்ச்சிதரும் உண்மை அம்பலமானது.

இதையும் படிங்க: 2 நாட்களாக மாற்றம் இல்லாத தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

மாணவியின் தோழி கைது

இந்நிலையில், மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், மாணவியின் தோழி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சிறுவன், கல்லூரி மாணவர் என 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், எட்டாவது நபராக தோழி கைது செய்யப்பட்டுள்ளார். 

chennai

பலாத்காரம்

இந்த விஷயம் குறித்து 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார். அரக்கோணத்தில் இருந்து வரும் கல்லூரி தோழி, பாதிக்கப்பட்ட பெண்ணை அறிமுகம் செய்து, சூழ்நிலையை பயன்படுத்தி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

திட்டமிட்டு கொடுமை

சுரேஷ் என்ற நபர் மாணவியை காதலிப்பதாக நடித்து, அதன்பேரில் பிறரை அத்துமீற அனுமதித்த அதிர்ச்சி தகவலும் அம்பலமானது. இந்த விவகாரத்தில் சுரேஷ், கார்த்திக், அஜித் குமார், சுப்பிரமணி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான இரண்டு பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயர் மின்னழுத்த கம்பி மீது கைபட்டு சோகம்; பெயிண்டர் பரிதாப பலி.!