தஞ்சாவூர்: "எம்புள்ள நிச்சயத்தை நடத்திப்பார்க்க பணம் இல்லையே" - விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை.!



in Thanjavur a Farmer Dies by SUicide 

மகளின் திருமண நிச்சயம் நடத்த பணம் இல்லாத விரக்தியில் விவசாயி தற்கொலை தற்கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம் (55). இவர் விவசாயி ஆவார். இவருக்கு மகன், மகள் இருக்கின்றனர். இதனிடையே, முருகானந்தத்தின் மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

நிச்சய விழாவுக்கு பணம் ஏற்பாடு செய்ய இயலாமல் முருகானந்தம் திணறி இருக்கிறார். இந்நிலையில், மகளின் நிச்சய விழாவை நடத்தி பார்க்க பணம் இல்லையே என வருகியவர், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

இதையும் படிங்க: தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழி.. 10 ஆண்டு ஸ்கெட்.. காத்திருந்து பகைதீர்க்க கொலை.. ரௌடி குறுந்தையன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

thanjavur

பூச்சி மருந்து குடித்து தற்கொலை

வாயில் நுரைதள்ளியபடி கிடந்த முருகானந்தத்தை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: சூரியனார் கோவிலில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழமையான சிலைகள் திருட்டு? சர்ச்சையில் சிக்கிய ஆதீனம் பகீர் தகவல்.!