ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழி.. 10 ஆண்டு ஸ்கெட்.. காத்திருந்து பகைதீர்க்க கொலை.. ரௌடி குறுந்தையன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

பாசமிகு தம்பியின் கொலைக்கு பழிவாங்க, அண்ணன் 10 ஆண்டுகள் காத்திருந்து ரௌடியின் கதை முடித்த சம்பவம் தஞ்சாவூரில் அரங்கேறி இருக்கிறது. முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்த கதையாக, ரௌடியை ரௌடியின் பாணியிலேயே பாசம் போட்டுத்தள்ளவைத்துள்ளது. ஆனால், கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுக்க வைத்த பாசம், பிற்பகுதியில் என்ன செய்யப்போகிறது? என்பதும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எழுபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் குறுந்தையன் (50). மார்ச் 11, 2025 அன்று, இவர் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலை கும்பலைச் சேர்ந்த ஒருவரை மக்கள் பிடிக்க முற்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆரோவில் பகுதியில் வசித்து வரும் வடிவேல் என்பவர் மக்களிடம் சிக்கினார்.
பிற அனைவரும் காரில் தப்பிச் சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து வல்லம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர். பொதுமக்கள் கையில் சிக்கிய வடிவேலிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: சூரியனார் கோவிலில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழமையான சிலைகள் திருட்டு? சர்ச்சையில் சிக்கிய ஆதீனம் பகீர் தகவல்.!
பழிக்குப்பழி அம்பலம்
விசாரணையில், தமிழ் பல்கலைக்கழகம் காவல் நிலையத்தில், ரௌடி பட்டியலில் இருக்கும் குறுந்தையன், கடந்த 2013 ம் ஆண்டு உலகநாதன் என்பவரையும், 2014 ம் ஆண்டு உதய என்பவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சம்பவம் நடத்தி குறுந்தையன் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்த அதிகாரிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி பகுதியில் பதுங்கி இருந்த நபர்களை கைது செய்தனர். ராஜா (வயது 33), முத்து மாறன் (வயது 46), மணிகண்டன் (வயது 33) ஆகியோர் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். உலகநாதன் என்பவரின் மரணத்துக்கு பழிவாங்க, உலகநாதனின் சகோதரர் முத்துமாரன் 10 ஆண்டுகளாக சதித்திட்டம் தீட்டி, காத்திருந்து ரௌடியின் கதை முடித்து தெரியவந்தது.
இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொடுமை.!