திருமணமான 2 ஆண்டுகளில் கல்லூரி மாணவியை இரண்டாம் காதலியாக்கிய ஓட்டுனர்? இரயில் மோதி உடல் சிதறி தற்கொலை.! 



in Theni a Love Couple Dies by SUicide 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஆண்டிபட்டி பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரின் மனைவி மருதநாயகி. தம்பதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இருமனம் நடைபெற்று முடிந்து, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பொள்ளாச்சி - கோயம்புத்தூர் வழித்தட பேருந்தில், மணிகண்டன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி, அன்னை சத்தியா நகர் பகுதியில் வசித்து வருபவர் ரத்தின சாமி. இவரின் மகள் சம்யுக்தா. இவர் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், பி.காம் துறையில் பயின்று வருகிறார். 

காதல் ஜோடி மாயம்

தினமும் மணிகண்டனின் பேருந்தில் சம்யுக்தா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அப்போது, மணிகண்டன் - சம்யுக்தா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதல் வயப்பட்டதாக தெரியவருகிறது. இதனிடையே, கடந்த மார்ச் 11 அன்று சம்யுக்தா மாயமாகினார். 

இதையும் படிங்க: தேனி: திருமணமான மினி பஸ் ஓட்டுனருடன் பழக்கம்; ஜோடியாக இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. உடல் சிதறி மரணம்.!

Theni

இரயில் மோதி பலி

இந்த விஷயம் குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, மணிகண்டன் - சம்யுக்தா தேனிக்கு சென்று, குன்னூர் வைகை ஆற்றின் இரயில்வே மேம்பாலத்துக்கு சென்றுள்ளனர். அங்கு தண்டவாளத்தில் கட்டிபிடித்தபடி நின்ற ஜோடியின் மீது, போடி - சென்ட்ரல் இரயில் மோதியது.

இந்த சம்பவத்தில் இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதிவேகத்தில் வந்த இரயில் மோதியதில், இருவரின் உடலும் துண்டு-துண்டாகியது. இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இருவருக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விசிக நிர்வாகி கைது.!