ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
மஞ்சள் தாலி ஈரம் காயல.. புதுமாப்பிள்ளை விபத்தில் பலி.. தங்கச்சிக்கு என்ன சொல்லுவேன்? - கண்ணீரில் வெதும்பிய இளைஞர்.!

புதுமணம் செய்தோர் சில நாட்களுக்கு நண்பர்கள், சாகசங்களை ஒதுக்கிவிட்டு, எங்கு சென்றாலும் கவனத்துடன் சென்று வருவது, நீண்ட எதிர்பார்ப்புடன் உங்களை நம்பி எதிர்கால பயணத்திற்காக காத்திருக்கும் நபர்களின் மனநிலைக்கு நல்லது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காசிரெட்டிபட்டி பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார். தாம்பரத்தில் பியூட்டிஸனாக வேலை பார்த்து வந்துள்ளார். உதயகுமாருக்கும், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்மணிக்கும், கடந்த பிப்ரவரி 02 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்ததால் சோகம்; 17 வயது சிறுமி தற்கொலை.!
நண்பர்களை பார்த்து வருவதாக புறப்பட்டார்
இதனிடையே, கடந்த பிப்.05 அன்று தனது மாமியாரின் வீட்டிற்கு சென்றிருந்த உதயகுமார், பிப்.06 அன்று நண்பர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில், பவித்ரா போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. பின் பவித்ராவுக்கு தொடர்புகொண்ட ஒருவர், உதயகுமார் சாலையில் வீழ்ந்து கிடந்தார்.
மரணம் உறுதி
மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படுகிறார் என தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் பதறியபடி மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு உதயகுமாரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் கல்யாணம் முடிந்த தடயம் கூட மாறவில்லையே, அதற்குள் இப்படி நடந்துருச்சே என கதறி அழுதனர். ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
அண்ணன் கண்ணீர் குமுறல்
என் தங்கச்சியை பொத்தி பொத்தி வளர்தேனே., சின்ன வயசுல இருந்து படத்துக்கு கூட போகாம, கணவரோடதான் போவேன் இருந்தாலே, எங்க வீட்டை விட்டு வெளியே கூட போகமாட்டாளே, அவளுக்கு நான் என்ன சொல்லுவேன் சார் என பவித்ராவின் சகோதரர் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: அடிசக்க.. இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ.!