அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்ததால் சோகம்; 17 வயது சிறுமி தற்கொலை.!

தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால், மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர், நத்தமேடு, சரவணா நகரில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி தீபா. தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கிறார்.
இதையும் படிங்க: எலுமிச்சை பறிக்கச் சென்று உயிரைவிட்ட பெண்; அலட்சிய அதிகாரிகளால் திருவள்ளூரில் சோகம்.!
தம்பதிகளின் மகள் திருநின்றவூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று முன்தினத்தில் முருகன், தீபா, தம்பதிகளின் மகன் வேலைக்கு சென்றுவிட்டனர்.
காவல்துறை விசாரணை
பின் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது, மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் இதுதொடர்பாக திருநின்றவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்தது தெரியவந்தது.
மாணவியின் அரையாண்டு தேர்வு மதிப்பெண் நேற்று முந்தினம் வழங்கப்பட்ட நிலையில், அதில் மாணவி சில பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கலிகாலத்தில் இப்படியும் நடக்குமா? 17 வயது சிறுவனை இழுத்து ஓடிய 28 வயது இளம்பெண்.. நடந்தது என்ன?