திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருவாரூர்: அரசுப்பள்ளி மாணவர்களின் வாக்குவாதம் மோதலில் முடித்தால் பரபரப்பு.. அதிர்ச்சி சம்பவம்.!
பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், இரண்டு தரப்பில் மோதலாகி காவல் நிலையம் வரை சென்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், பூந்தோட்டம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் பயின்று வரும் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு இடையே, கடந்த அக்.10 ம் தேதியன்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கந்து வட்டி தகராறு... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!
இந்த சம்பவம் குறித்து சண்டையிட்டுக்கொண்ட இரண்டு மாணவர்களில் ஒருவர், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறி இருக்கிறார். இதனால் அவர்கள் திரண்டு வந்து எதிர்தரப்பு மாணவர்களை பொதுவெளியில் வைத்து கும்பலமாக சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள்.
இருதரப்பு மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மோதல்
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு மாணவர், தனது ஆதரவாளர்கள் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஒரு மாணவர் காயமடைந்ததைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இந்த விஷயம் குறித்து இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் 11 பேரின் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, பூந்தோட்டம் கடைவீதியில் நடந்த மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவத்தின் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
#JUSTIN அரசுப் பள்ளி மாணவர்களிடையே வாக்குவாதம்; இருதரப்பினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல்; சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு#Tiruvarur #SchoolStudents #Fight #CCTV #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/MSvJFfdmRn
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 12, 2024
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரி வாசலில் கெத்து காட்ட நினைக்கும் புள்ளிங்கோக்களுக்கு ஆப்பு; போலீஸ் அக்கா திட்டம்.!