"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
பள்ளி, கல்லூரி வாசலில் கெத்து காட்ட நினைக்கும் புள்ளிங்கோக்களுக்கு ஆப்பு; போலீஸ் அக்கா திட்டம்.!
தென்காசி மாவட்டத்திலுள்ள பெண்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல்துறை இயக்குநர் பரிந்துரையின் அடிப்படையில், தென் மண்டல காவல்துறை தலைவர் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மேற்பார்வையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஶ்ரீனிவாசன் கண்காணிப்பில், மாவட்டத்தில் உள்ள பெண்கள் பள்ளி மற்றும் பெண்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள 19 பெண்கள் பள்ளி மற்றும் பெண்கள் கல்லூரிகளுக்கு ஒவ்வொரு பெண் காவலர்கள் என்று நியமிக்கப் பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கில் நடந்த பிரச்சனையில் முதியவர் அடித்துக்கொலை; எழவு வீட்டில் நடந்த அடுத்த சோகம்.!
இதன்படி நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்கள் வாரம் ஒரு முறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்தும் விதமாக தங்களின் தொலைபேசி எண்களை மாணவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனவும்,
போலீஸ் அக்கா
மாணவிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதுடன், உடனடியாக துரித விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், போலீஸ் அக்காவிடம் மாணவிகள் எந்த தயக்கமுமின்றி தகவல்களை தெரிவிக்கவும் காவல் துறைக்கும் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த திட்டத்தின் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் வாசலில் இருந்து பேருந்து நிலையங்கள் வரை, பெண்களின் வீட்டிலும் அல்லது வெளியிலும் ஏதேனும் அவர்களுக்கு ஏதிரான குற்றங்கள் நடந்தால் உடனடியாக மாணவியின் மூலமாக தகவல் பெறப்பட்டு, அதன் பேரில் புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபடும் நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பெண்களுக்கு எதிராக நாடாகும் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: தென்காசி: கள்ளகாதலியுடன் சேர்த்து செய்யக்கூடாத வேலை; தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்..!