மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருப்பூர்: வேகம் + கவனக்குறைவால் கோரம்.. 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!
தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வோர், கவனக்குறைவுடன் செயல்பட்டால் எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.
கோவையில் வசித்து வரும் இளம்பெண் அபர்ணா. இவரின் சகோதரி ஹேமா. இவரின் நண்பர் மோனிஷ் பாபு. இவர்கள் மூவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து, கோவை நோக்கி நேற்று இரவு காரில் புறப்பட்டனர்.
இதையும் படிங்க: திருப்பூர்: தெருவையே நாசப்படுத்திய அலட்சியம்: டன் கணக்கில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள்.!
லாரி மீது மோதல்:
இவர்களின் கார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் வந்தபோது, முன்னால் சென்றுகொண்டு இருந்த வாகனத்தை அபர்ணாவின் கார் வலதுபுறமாக முந்த முயன்றுள்ளது. அச்சமயம், பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
மூவரும் பலி
இந்த விபத்தில் காரில் பணம் செய்த அபர்ணா, ஹேமா, மோனிஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் அப்பளம் போல நொறுங்கியதால், அதில் இருந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்து போயினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவிநாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூர்: கைகளை கண்ணாடி கிழிந்தாலும், 65 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர்; நெகிழ்ச்சி செயல்., குவியும் பாராட்டுக்கள்.!