திருப்பூர்: தெருவையே நாசப்படுத்திய அலட்சியம்: டன் கணக்கில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள்.!



Tiruppur Rains Flood Sewage Water and Wastes are washed Away 

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது. 

இயல்பை விட அதிக மழை 

கடந்த 15 நாட்களில் பெய்ய வேண்டிய இயல்பு மழையை விட, 95 % அதிகம் மழை பெய்துள்ள காரணத்தால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் லேசான வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர மாநகராட்சி, தமிழ்நாடு அரசு சார்பில் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: திருப்பூர்: கைகளை கண்ணாடி கிழிந்தாலும், 65 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர்; நெகிழ்ச்சி செயல்., குவியும் பாராட்டுக்கள்.!

இதனிடையே, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. கோவையில் உள்ள சாயிபாபா காலனி இரயில்வே பாலம் சமீபத்தில் வெள்ளத்தில் மூழ்கி, தண்ணீர் தேங்கி பேருந்து சிக்கிக்கொண்டது.

குப்பைகள் அடித்து செல்லப்பட்டது

இந்நிலையில், திருப்பூரில் உள்ள காந்தி நகர் பகுதியில் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, சாக்கடை நீருடன், பல பிளாஸ்டிக் பாட்டில்களும் அடித்து செல்லப்பட்டன. இந்த பாட்டில்கள் எங்கிருந்து அடித்து செல்லப்பட்டது என தெரியவில்லை. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

மழை பெய்தபோது வெளியேறிய நீர் குப்பைகளை மொத்தமாக அடித்து நகர்த்தியதால், குப்பையோடு குப்பையாக பாட்டில்களும் இழுத்து செல்லப்பட்டு இருக்கலாம் என களநிலவரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: 9 மாத கைக்குழந்தை, பெண் உட்பட 3 பேர் பலி; திருப்பூரில் பயங்கரம்.. பட்டாசு வெடித்துச் சிதறி சோகம்.!