நம்ம திருப்பூரில் இப்படியா? மெடிக்கலில் மருந்து வாங்கியபடி உயிரைவிட்ட இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

மரணம் எப்படியெல்லாம் வருகிறது என்பதை நினைத்தாலே வருத்தம் தான் மிஞ்சுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயம்பாளையம் பகுதியில், தனியாருக் சொந்தமான மெடிக்கல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை சுமார் 04:30 மணியளவில் மெடிக்கலுக்கு இளைஞர் ஒருவர் வருகை தந்தார்.
இதையும் படிங்க: திருப்பூர்: பஸ்டாண்டில் பிரசவ வலி.. பிறந்தது ஆண் குழந்தை... ஓடோடி வந்து உதவிய தூய்மை பணியாளர்கள், காவலர்கள்.!
அவர் மெடிக்கலில் மருந்து வாங்கிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென மயங்கி சரிந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மெடிக்கல் கடை பணியாளர் மற்றும் பொதுமக்கள் இளைஞருக்கு தண்ணீர் கொடுக்க முற்பட்டனர்.
மரணம் உறுதி
இளைஞர் எவ்வித அசைவும் இன்றி இருந்ததால், உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மருத்துவப்பணியாளர்கள், விரைந்து வந்து இளைஞரை சோதனை செய்தனர்.
அப்போது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிசிடிவி காட்சிகள் வைரல்
மேலும், உயிரிழந்த நபர் குறித்து விசாரிக்கையில், அவர் அங்குள்ள பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர், விசாரித்தபோது, இளைஞரின் மரணம் தொடர்பான காட்சியும் வெளியானது.
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: #Breaking: திருப்பூரில் முதிய தம்பதி கொல்லப்பட்ட விவகாரம்; பக்கத்து வீட்டில் வசித்தவர் கைது.. மாவுக்கட்டு?.!