வேலூர்: லாரி - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; கல்லூரி மாணவர் பலி.!



in Vellore Katpadi College Student Dies Accident 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் வசித்து வருபவர் நகீம். இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, திடீரென நகீமின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நகீம் நிகழ்விடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: வேலூர்: கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்.!

vellore

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நகீமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
 

இதையும் படிங்க: நிச்சயம் முடிந்த மகளின் திருமணத்துக்கு எடுக்கப்பட்ட 40 சவரன் நகைகள் கொள்ளை; வேலூரில் அதிர்ச்சி.. பெற்றோர் கண்ணீர்.!