கொள்ளை வழக்கில் சிறை சென்றவருடன் 16 வயது சிறுமி காதல்.. திருட்டு கைதி போக்ஸோவில் கைது.!

ஜாமினில் வெளியே சுற்றும் கைதியுடன் பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்ட சிறுமி, கயவனால் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் செஞ்சியில் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமி ஒருவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில், பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு தர்ம அடி.. இரயில் பயணத்தில் சம்பவம்.!
இவர் அப்பகுதியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி இருக்கிறார். கடந்த பிப்.24 அன்று சிறுமி சொந்த ஊர் செல்வதாக விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் வீட்டுக்கு வரவில்லை.
சிறுமி மாயமான தகவல் அறிந்த தந்தை, தேசூர் காவல் நிலையத்தில் மார்ச் 03 அன்று புகார் அளித்தார். இகன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
சிறுமியிடம் காதல் நாடகம் & பலாத்காரம்
விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, தாழனூர் கிராமத்தை சேர்ந்த உதயசங்கர் (வயது 24) என்பவர், சிறுமியை காதலித்து வந்தது தெரியவந்தது.
மேலும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, உதய்சங்கரை அதிகாரிகள் போக்ஸோயில் கைது செய்தனர்.
கைதாகிய உதயசங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்ததாக வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று, ஜாமினில் வெளியே இருக்கிறார் என்பது அதிகாரிகள் கூறும் தகவலாக இருக்கிறது.
இதையும் படிங்க: தாய்-தந்தையை இழந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவிகள்.. விழுப்புரத்தில் சோகம்.!