'பட்டினியா கூட சாகுறோம்., இந்த சாப்பாடு வேண்டாம்' - கெட்டுப்போன உணவுகளை கொடுத்த திமுக நிர்வாகி.! கடுப்பில் கடிந்துகொண்ட மக்கள்.!



 in Viluppuram DMK Supporter Gives Yesterday food to peoples 

பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு அரசு, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பாத தொடங்கியுள்ளது. நேற்று வரை அரசின் சார்பில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் இருக்கும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது.

முதல்நாள் உணவுகள்

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரங்கண்டநல்லூர் கிராமத்தின் ஒரு பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட உணவுகள், நேற்று சமைக்கப்பட்ட தரமற்ற உணவுகளை வழங்கியாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். திமுக நிர்வாகி ஒருவர் விநியோகம் செய்த உணவுகள், கெட்டுப்போய் இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைப்பட்டது. 

இதையும் படிங்க: ரூ.16 கோடி பாலம் எங்கே? திறந்து 3 மாதங்களில் மூடுவிழா கண்ட ஆற்றுப்பாலம்.. திருவண்ணாமலையில் சம்பவம்.!

மக்கள் வருத்தம்

ஏற்கனவே 2 - 3 நாட்களாக நாங்கள் பட்டினியாக இருக்கிறோம். இந்த கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு, உடல்நலனை நாங்கள் கெடுத்துக்கொள்ள வேண்டுமா? என பொங்கிய பொதுமக்கள், மிகுந்த மனத்துயரத்திற்கு உள்ளாகினர். அரசு நல்லது செய்தாலும், உள்ளூர் நிர்வாகிகள் இவ்வாறாக செய்வதாக மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். 

வீடியோ நன்றிpolimernews

இதையும் படிங்க: நெற்றிக்கண்ணை திறந்த சிவன்? திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு காரணம் இதுவா? சித்தர் பரபரப்பு தகவல்.!