Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நெற்றிக்கண்ணை திறந்த சிவன்? திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு காரணம் இதுவா? சித்தர் பரபரப்பு தகவல்.!
கஞ்சா, மதுக்கடைகளால் திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோபத்தில் இருப்பதாக சித்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மழை-வெள்ளம் உயிரிழப்பு
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் அங்கு ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. திருவண்ணாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: சேலம்: ஏற்காடு மலைப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு பின் அனுமதி.!
கஞ்சா குடிக்கிகள் அட்டகாசம்
இந்நிலையில், சித்தர் ஒருவர் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை, சிவன் நெற்றிக்கண் திறந்ததாக விவரித்து, மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த காணொளியில் சித்தர் என்று தன்னை அறிமுகப்படுத்தி பேசுபவர், "திருவண்ணாமலை ஆன்மீக பூமி. இங்கு வெள்ளத்தில் தண்ணீரில் பாட்டில் மிதந்து செல்கிறது. ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் குடி, கஞ்சா போன்றவை அதிகரித்து இருக்கிறது.
எச்சரிக்கை பாடம்
இதனால் ஆத்திரமடைந்த சிவன் தான், இப்படியான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இயல்பாக நிலச்சரிவு ஏற்பட்டால், பல்வேறு விதங்களில் ஏற்படும். ஆனால், இங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சிவன் நெற்றிக்கண்ணை திறந்ததுபோல இருக்கிறது. இது மக்களுக்கு எச்சரிக்கை பாடம். அனைவரும் சரியாக இல்லை என்றால், ஒருகட்டத்திற்கு மேல் அவர் பொறுக்கமாட்டார். சிவன் நெற்றிக்கண்ணை திறந்ததுபோல நிலச்சரிவு இருப்பதால், அவர் கொடுக்கும் எச்சரிக்கை பாடம் இது.
சிவனின் கோபம்தான்
தனது கோபத்தை அவர் வெளிப்படுத்துகிறார். திருவண்ணாமலையில் இன்று வரையில் நிலச்சரிவு என்பது ஏற்பட்டது இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் நிலைத்து நிற்கும் திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ள இந்த அழிவு, சிவனின் கோபத்தையே உணர்த்துகிறது " என பேசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: #Breaking: "தமிழகத்திற்கு உறுதுணையாக இருப்போம்" - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.!