மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராஜபாளையம்: எடுத்தேன் பாரு ஓட்டம்.. பணத்தை இழந்து சுத்துப்போட்ட மக்கள்.. 1 இலட்சத்துக்கு வாரம் ரூ.10 ஆயிரமாம்..!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில், ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.1 இலட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.40 ஆயிரம் (வாரம் ரூ. 10 ஆயிரம்) வழங்கப்படும் என கவர்ச்சிகர விளம்பரம் செய்து, பலநூற்றுக்கணக்கானோரிடம் இருந்து மொத்தமாக ரூ.2 கோடி வரை வசூல் செய்யபட்டுள்ளது.
இதனிடையே, பணத்திற்கான மாத தொகையை வழங்காமல் அந்நிறுவனம் இழுத்தடித்து, ஒருகட்டத்தில் மக்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் முதலீடு செய்திருந்தவர்கள் பலரும் காவல் நிலையத்தில் தங்களின் பணத்தை மீட்டுக்கொடுக்கக்கூறி புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: விருதுநகர்: சதுரகிரி மலைக்கு செல்ல தடை; வனத்துறை அறிவிப்பு.. பக்தர்களுக்கு வேண்டுகோள்.!
பாதிக்கப்பட்டவர்கள் சுற்றிவளைப்பு
இந்நிலையில், டிரான்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இதேபோன்ற நிதி மோசடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டறிந்த பாதிக்கப்பட்டவர்கள், திருமண மண்டபத்திற்கு சென்று டிரான்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் செழியனை சுத்துப்போட்டனர்.
காவல்நிலையத்தில் மீண்டும் புகார்:
ஒருகட்டத்தில் அவர் தனது காரை அங்கேயே விட்டுவிட்டு நடையோட்டமாக தப்பிச் சென்றார். அவரின் கார் இராஜை நகர வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள்ள நிலையில், தங்களின் பணத்தை மீட்டுத்தருமாறும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருதலைக்காதலால் சோகம்; 31 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை.!