விருதுநகர்: சதுரகிரி மலைக்கு செல்ல தடை; வனத்துறை அறிவிப்பு.. பக்தர்களுக்கு வேண்டுகோள்.!



Virudhunagar Sathuragiri Hills Temple Visit Banned by Forest Department 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தாணிப்பாறை சதுரகிரி மலையில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு மாதத்தின் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கமான ஒன்று. 

மழை எதிரொலி

மலை மீது அமைந்துள்ள கோவிலின் கட்டுப்பாடு வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், மலையேற்றத்திற்கான அனுமதி குறித்த முடிவுகளை வனத்துறையே எடுக்கும். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

இதையும் படிங்க: ஒருதலைக்காதலால் சோகம்; 31 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை.!

மலைக்கோயிலுக்கு செல்ல தடை

மேற்குத்தொடர்ச்சி மலைமீது அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்யும் நிலையில், இன்று (அக்.15) முதல் அக்.18 வரை பக்தர்கள் மலைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்லும் எண்ணத்துடன் வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

விபரம் தெரியாமல் தாணிப்பாறை வரும் பக்தர்களும் வனத்துறையால் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க: குடிகார மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தந்தை உடல்நலக்குறைவால் மரணம்; அடுத்தடுத்து சோகம்.!