#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என் தங்கச்சி கூட எப்படி பேசுவ? 21 வயது இளைஞர் 7 பேர் கும்பலால் அடித்தே கொலை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
சிறுமியிடம் இளைஞர் பேசுவதை தட்டிக்கேட்ட தகராறில், இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜகத்புரி பகுதியில் வசித்து வரும் இளைஞர் அர்பித் (வயது 21). இவர் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் விருப்பம் இல்லாத சிறுமியின் சகோதரர், அர்பித்தை தனது தங்கையுடன் பேசவேண்டாம் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: திருடனை அடித்தே கொன்ற குடும்பம்.. ஆவேசத்தால் கொலை வழக்கில் சிக்கிய சோகம்.!
இளைஞர் மீது தாக்குதல்
இதனை கண்டுகொள்ளாத அர்பித் தொடர்ந்து சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று அர்பித்தை சிறுமியின் சகோதரர், அவரின் ஆதரவாளர்கள் உட்பட 6க்கும் மேற்பட்டோர் அர்பித்தை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பரிதாப பலி
இதனால் படுகாயமடைந்த இளைஞர் அர்பித், அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் அவர் உடல்நலம் தேறியதாக வீட்டிற்கு அனுப்பி வாய்ப்பட்ட நிலையில், கடும் வயிற்று வலி ஏற்பட்டு அலறித்துடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, மயங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 பேர் கைது
அவரின் மரணத்தை மருத்துவர்களும் உறுதி செய்தனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அர்பித்தின் மாமா வழங்கிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சகோதரர் துருவ், நிஷு, ரவீந்திர குமார் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், துருவின் தங்கையிடம் அர்பித் பேசி வந்ததாகவும், இது பிடிக்காமல் எச்சரித்ததையும் மீறி அர்பித் செயல்பட்டதால், தகராறு நடந்ததும் தெரியவந்தது. இந்த தகராறில் தாக்கப்பட்ட அர்பித் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு... பெண்களை வீடியோ எடுத்த போலீஸ்காரர்.!! மடக்கி பிடித்த பொதுமக்கள்.!!