கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்; வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வழக்கு.!



Kallakurichi Liquor Case Investigation AIADMK Appeal 

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்களில் 36 பேர் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி பலியாகினர். இவர்களின் உடல் அடுத்தடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 80 க்கும் அதிகமானோர் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதிமுக சார்பில் முறையீடு

இந்நிலையில், விஷ சாராய மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் சார்பில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த முறையீடு மனுவில், "கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரத்தை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ க்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். உரிய விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மை தெரியவரும்" என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசின் செயல்பாடு.. துறை அமைச்சரின் பதவியை பறியுங்கள் - மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் கடும் கண்டனம்.!

நாளை விசாரணை

அச்சமயம் ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், "விசாரணை தற்போதைய நிலைமையில் சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என வாதிடப்பட்டது. வழக்கை விசாரணைக்கு நாளை எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், விசாரணையை நாளையை தினத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: #BigBreaking: "அரசு நிர்வாகத்தின் அலட்சியமே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு காரணம்" - த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க குற்றசாட்டு.!