#BigBreaking: "அரசு நிர்வாகத்தின் அலட்சியமே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு காரணம்" - த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க குற்றசாட்டு.! 



TVK Vijay Condemn Kallakurichi Illicit LIquor Case 

 

கள்ளக்குறிச்சியில் பலரின் உயிரைப்பறித்த கள்ளச்சாராய விவகாரத்திற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், சிகிச்சை பெற்றுவருவோர் உடல்நலம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்களில் 35 பேர் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி பலியாகினர். இவர்களின் உடல் அடுத்தடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 80 க்கும் அதிகமானோர் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 35 பேர் பலி., 10 பேர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.!

த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கண்டன செய்திக்குறிப்பில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். 


 

 
 

 

 

இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 35 பேர் பலி., 10 பேர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.!