96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கையாலாகாத திமுக அரசின் செயல்பாடு.. துறை அமைச்சரின் பதவியை பறியுங்கள் - மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் கடும் கண்டனம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்களில் 36 பேர் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி பலியாகினர். இவர்களின் உடல் அடுத்தடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 80 க்கும் அதிகமானோர் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுவிலக்குத்துறை அமைச்சர் பதவி விலக கோரிக்கை
இந்த விஷயம் குறித்து கூறுகையில், "கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது மிகப்பெரிய சோகம். அதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். கையாலாகாத திமுக அரசின் செயல்பாட்டினால், 30 க்கும் மேற்பட்டோர் பலி, 80 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதுசம்பந்தமாக அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடை அரசு உடனடியாக வழங்க வேண்டும். ஏழை குடும்பத்தை சேர்ந்த பலரும் உயிரிழந்து இருக்கின்றனர்" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BigBreaking: "அரசு நிர்வாகத்தின் அலட்சியமே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு காரணம்" - த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க குற்றசாட்டு.!
வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்
"திராவிட மாடல் என்பது போதை மாடலாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறினார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை" என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனும் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 35 பேர் பலி., 10 பேர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.!