மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயணிகளிடம் கறாராக நடந்துகொள்ளும் தனியார் பேருந்து ஓட்டுநர்; அங்கெல்லாம் இந்த பஸ் நிற்காதாம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் - கள்ளக்குறிச்சி - திருக்கோவிலூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், பிவிஜி என்ற தனியார் பேருந்து, த.நா 15 பி 1740 என்ற பதிவெண்ணுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து இன்று மதியம் 01:40 மணியளவில் எலவனாசூர்கோட்டை பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. அச்சமயம் பேருந்தில் பயணிகள் ஏற முற்பட்ட நிலையில், அவ்வழியே உள்ள வெள்ளையர் மற்றும் குமாரமங்கலம் ஆகிய கிராமங்களில் பேருந்து நிற்காது.
பயணிகளின் கோரிக்கை நிறைவேறுமா?
அடுத்ததாக உளுந்தூர்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே பேருந்து நிற்கும் என நடத்துனர் கூறி இருக்கிறார். மேலும், அந்த ஊரைச் சேர்ந்த பயணிகள் சிலர் தங்களின் கோரிக்கையை முன்வைத்தபோது, பேருந்து நடத்துனர் பயணிகளிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கட்டிங் போதையில் அயர்ந்து உறங்கிய ஆசாமி; கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கதறிய பரிதாபம்..!
இதனால் இவ்விசயம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர். மேலும், ஒருசில நேரம் அரசு பேருந்துகளும் மேற்கூறிய கிராமங்களில் பேருந்து நிற்காது என தெரிவிப்பதால், அந்த ஊருக்கு செல்ல வேண்டிய பயணிகள் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
தகவல் நன்றிஎங்க உளுந்தூர்பேட்டை டிஎக்ஸ் அஜித் சிவா
இதையும் படிங்க: ரேஷன் கடையில தரமில்லாத பொருட்கள் கொடுக்குறாங்களா? புகார் அளிக்கும் முறை.. இதோ.!