கட்டிங் போதையில் அயர்ந்து உறங்கிய ஆசாமி; கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கதறிய பரிதாபம்..!



Trichy Drunken Man Rescued from Kollidam River bridge

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு ஒகேனக்கல் வழியே இலட்சக்கணக்கான நீர் வினாடிக்கு வருகிறது. இந்த நீர் நேரடியாக மேட்டூர் அணை வந்ததும், அங்கிருந்து நேரடியாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது. 

இதனால் காவேரி ஆறு பாயும் 11 மாவட்டங்களில் உள்ள காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரம் இருக்கும் மக்களை முகாம்களில் தங்க வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உறக்கத்திலும் தெளிவாக இருந்ததால் அதிஷ்டவசமாக உயிர்பிழைப்பு

இந்நிலையில், கட்டிங் குடித்த மதுபிரியர் சசிகுமார் என்பவர், திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நேற்று போதையில் உறங்கி இருக்கிறார். இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடத்தொடங்கிய நிலையில், சசிகுமார் பதற்றத்தில் தூண்களுக்கு அருகில் சென்று நின்றுகொண்டார். 

இதையும் படிங்க: ரேஷன் கடையில தரமில்லாத பொருட்கள் கொடுக்குறாங்களா? புகார் அளிக்கும் முறை.. இதோ.!

இதனைக்கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் சசிகுமார் பத்திரமாக மீட்கப்பட்டார். இனி வரும் காலங்களில் காவேரியில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும் என்பதால், இப்பகுதிக்கு வரக்கூடாது எனவும் எச்சரித்து அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவரகம்; பெண் கைது, குழந்தை மீட்பு.!