தாய், தந்தை, 2 குழந்தைகள் சடலமாக மீட்பு; பெங்களூரில் நடந்த சோகம்.. கலங்கவைக்கும் துயரம்.!



in Karnataka Bangalore Family Found Death 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் வசித்து வருபவர் அனுஜ் குமார் (வயது 38). இவரது சொந்த ஊர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டமாகும், தற்போது பணி நிமித்தமாக பெங்களூரில் தங்கி இருக்கிறார். 

இவரின் மனைவி ராக்கி (வயது 35). தம்பதிகளுக்கு அனு பிரியா என்ற 5 வயதுடைய மகன், பிரியான்ஷ் என்ற 2 வயதுடைய மகள் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்கார விவகாரம்; தோழி அதிரடி கைது.!

karnataka

குடும்பத்தினர் சடலமாக மீட்பு

இவர்கள் அனைவரும் பெங்களூர் ஆர்எம்வி பகுதியில் தங்கி இருக்கின்றனர். இதனிடையே, இன்று காலை நேரத்தில் இவர்கள் வீட்டில் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிகள் விஷம் குடித்து குழந்தைகளை கொலை செய்துவிட்டு, பின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 2 நாட்களாக மாற்றம் இல்லாத தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!